கடலூரில் அதிக பாரம் ஏற்றி வந்த 5 லாரிகளுக்கு அபராதம்
- டிப்பர் லாரிகளில் அதிக அளவு ஜல்லி, மற்றும் எம்சாண்ட் ஏற்றி வந்த 5 லாரிகளுக்கு சோதனை அறிக்கை வழங்கி, ரூ1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- 4 சக்கர வாகனங்கள் ஓட்டுவோர் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது.
கடலூர்:
கடலூரில் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை தணிக்கை செய்ய கடலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுதாகர் உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன் தலைமையில், போக்குவரத்து துறை அதிகாரிகள் கடலூர் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது டிப்பர் லாரிகளில் அதிக அளவு ஜல்லி, மற்றும் எம்சாண்ட் ஏற்றி வந்த 5 லாரிகளுக்கு சோதனை அறிக்கை வழங்கி, ரூ1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ஷேர் ஆட்டோக்களில் அதிக ஆட்களை ஏற்றி சென்ற டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு வாக்கு சக்கர வாகனங்களை தணிக்கை செய்தனர். அப்போது இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஓட்டுவோர் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது. வாகனங்களுக்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும். சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது போன்ற அறிவுரைகள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.