சரக்கு லாரி- பஸ் மோதி 6 பேர் படுகாயம்
- லாரியின் ஒரு பக்க முன்புறம் சேதமடைகிறது.
- அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி போக்குவரத்து கழக பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் திருநாகேஸ்வரம் தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி சுமை ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், பஸ்சும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பஸ்சின் முன் பக்கம் நசுங்கியது.
லாரியின் ஒரு பக்க முன்புறம் சேதமடைகிறது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் காரைக்கால் சேத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 38). கண்டக்டர் புதுச்சேரி திருப்புவனம் பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் (47), கூத்தகுடியை சேர்ந்த சிவசக்தி (17), காரைக்கால் கணபதி நகரை சேர்ந்த சிராஜ் நிஷா (58), விருதுநகர் சொக்கநாதபுத்தூர் பகுதியை சேர்ந்த சித்ரா (30), குடவாசலை சேர்ந்த ரவி (57) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.