யோகினி சிவாம்பா சரஸ்வதி மாதாஜி 60-வது ஜன்ம தின பூஜை
- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் 60-வது ஜன்ம தின பூஜை ஆடி முதல் நாளான நேற்று நடைபெற்றது.
- ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பல வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் யோகினி சிவாம்பா சரஸ்வதி மாதா ஜியின் 60-வது ஜன்ம தின பூஜை ஆடி முதல் நாளான நேற்று நடைபெற்றது.
புனித நீருடன் கலசங்கள் வைக்கப்பட்டு யாக வேள்விகளு டன் பூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பல வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் உடன் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யோகினி சிவாம்பா சரஸ்வதி மாதாஜிக்கு பாத பூஜை உடன் கலச அபிஷேகம் செய்தனர். மதியம் மகேஸ்வர பூஜையுடன் விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
யோகினி சிவாம்பா சரஸ்வதி மாதாஜி அனைவருக்கும் அருளாசி வழங்கினார். இந்த நிகழ்வில் பல நகரங்களில் இருந்து வந்திருந்த சாதுக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் அருளாசி வழங்கினார்கள்.