ஊட்டி அரசு கல்லூரியில் 7 நாட்கள் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
- புத்தக திருவிழா கல்லூரியில் நடந்தது.
- கல்லூரி வளாகத்தில் 76 மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஊட்டி,
கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தலின் படி, 75-வது சுதந்திர தின விழா ஊட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 7 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி கடந்த 11-ந் தேதி முதல் நேற்று வரை 7 நாட்கள் தினமும் காலை 9 மணியளவில் கல்லூரி முதல்வர் எபனேசர் (பொறுப்பு) தேசியக்கொடியை ஏற்றினார். கடந்த 11-ந் தேதி போதை விழிப்புணர்வு பேரணி, 13-ந் தேதி தேசியக்கொடி பேரணி, பேச்சு, நடனம், மாறுவேட போட்டிகள் நடைபெற்றது. இதில் வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், ஜான்சி ராணி உள்பட பல்வேறு வேடங்களில் தோன்றி மாணவர்கள் அசத்தினர். தொடர்ந்து கடைசி நாளான நேற்று 76-வது சுதந்திர தினம் தொடங்கி உள்ளதை குறிக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் 76 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் தாவரவியல் துறை சார்பில், புத்தக திருவிழா கல்லூரியில் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு புத்தகங்களை வாங்கி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் ரவி செய்திருந்தார்.