உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை படத்தில் காணலாம்.

திட்டக்குடி அருகே வீட்டில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2022-07-14 07:21 GMT   |   Update On 2022-07-14 07:21 GMT
  • திட்டக்குடி அருகே வீட்டில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
  • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வாகையூர் மூப்பனார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 80)கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் இவரது வீட்டில் 4-டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளனர். இதை வீட்டில் அருகே இருந்தவர்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர். குடிமை பொருள் மற்றும் ராம்நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம நபர்களால் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதே போன்று ராமநத்தம் அருகே உள்ள கண்டமத்தான் கிராமத்தில் ஒரு வீட்டில் 3 டன் ரேஷன் அரிசி இதேபோன்று பதுக்கி வைத்திருந்தது தெரிய வரவே உடனே போலீசார் அதனையும் பறிமுதல் செய்தனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர். 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தது அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News