உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.85 சதவீதம் பேர் தேர்ச்சி

Published On 2023-05-09 09:15 GMT   |   Update On 2023-05-09 09:15 GMT
  • மாநில அளவில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 85 மேல்நிலைப் பள்ளிகளில் 33 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஊட்டி,

பிளஸ் 2 பொதுத் தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.85 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்தாண்டை விட 1.31 சதவீதம் அதிகம்.

தமிழகம் முழுவதும் பிளஸ் -2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, தேர்ச்சி விகிதத்தில் நீலகிரி மாவட்டம் 93.85 சதவீதம் பெற்று, மாநில அளவில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 3246 மாணவர்கள், 3743 மாணவியர்கள் என மொத்தம் 6989 பேர் எழுதினர்.

இதில், 2945 மாணவர்கள், 3614 மாணவிகள் என மொத்தம் 6559 பேர் தேர்ச்சிடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.85 சதவீதம் ஆகும். மாணவர்கள் 90.73 சதவீதமும், மாணவிகள் 96.55 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட 1.31 சதவீத தேர்ச்சி அதிகம்.

மாவட்டத்திலுள்ள 85 மேல்நிலைப் பள்ளிகளில் 33 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அரசு மாதிரி பள்ளி, கக்குச்சி, மேலூர் ஒசஹட்டி, சோலூர், தாவணி, எமரால்டு ஆகிய 6 அரசு பள்ளிகள், குஞ்சப்பணை பழங்குடியின நலப்பள்ளியும் அடங்கும். குஞ்சப்பணை பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளியில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள், 19 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் பலர் தங்களின் பள்ளிகளுக்கு சென்று மதிப்பெண்களை பார்த்து, ஆசிரியர்களிடம் ஆசி வாங்கி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

Similar News