உள்ளூர் செய்திகள்

சிறுமுகையில் 5 அடி நீள அரிய வகை நாகம் பிடிபட்டது

Published On 2023-04-10 09:39 GMT   |   Update On 2023-04-10 09:39 GMT
  • குடிநீர் தொட்டியில் பாம்பு ஒன்று சுற்றி திரிந்தது.
  • பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான்நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(48). விவசாயி.சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் தொட்டியில் கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று சுற்றி திரிந்தது.இதுகுறித்து பழத்தோட்டம் பகுதியை சேர்ந்த பாம்பு பிடி வீரரான காஜாமைதீனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து குடிநீர் தொட்டியில் இருந்த 5 அடி நீளமுள்ள அரிய வகை நாகத்தினை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்தப்பாம்பினை சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தலின்படி வனப்பகுதியில் விட்டார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் பாம்பு பிடி வீரரால் பிடிபட்ட நாகம், அரியவகை பொறி நாகம். இது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டது என்றனர்.

Tags:    

Similar News