நெல்லை காவேரி ஆஸ்பத்திரியில் 77 வயது மூதாட்டிக்கு அதிநவீன இதய அறுவை சிகிச்சை
- ஸ்டென்டிங் சிகிச்சை மூலம் 2 ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை அகற்றியது.
- நெல்லையில் ரத்தக்குழாய் மூலமாகவே இந்த நவீன அறுவை சிகிச்சை செய்து சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.
நெல்லை:
நெல்லை காவேரி ஆஸ்பத்திரியில் 77 வயது பெண்ணுக்கு அதிநவீன இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இதுகுறித்து இதய சிகிச்சை டாக்டர் மகபூப் சுபுஹாணி கூறியதாவது:-
பாளையங்கோட்டையை சேர்ந்த 77 வயது பெண்ணுக்கு, நடந்து செல்லும் போது மூச்சு திணறல் மற்றும் படபடப்பு ஏற்பட்டு வந்துள்ளது. அவர் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
முழு உடல் பரிசோதனை செய்த போது அவருக்கு இருதய பெருந்தமணி வால்வில் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. ஆஞ்சி யோகிராம் பரிசோதனை செய்து பார்த்ததில், இதயத்துக்கு செல்லும் 2 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து எனது தலைமையில் மருத்துவ குழு ஆஞ்சியோ பிளாஸ்டி என்ற ஸ்டென்டிங் சிகிச்சை மூலம் 2 ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை அகற்றியது. மேலும் பெருந்தமணி வால்வு பகுதியில், 'டேவி' எனப்படும் டிரான்ஸ் கதீட்டர் பெருந்தமணி வால்வு இன்ஸ்பிளான்டேஷன் என்ற நவீன சிகிச்சை முறையில் வால்வு பொருத்தப்பட்டது. வழக்கமாக இத்தகைய பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்து, அடைப்பு நீக்கப்படும். ஆனால் தற்போது மதுரைக்கு தெற்கே நெல்லையில் இந்த ரத்தக்குழாய் மூலமாகவே இந்த நவீன அறுவை சிகிச்சை செய்து சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. இதய டாக்டர் ஜோப், டாக்டர்கள் செல்வி, கார்த்திக் ஆகியோரின் கூட்டு முயற்சியினாலும்இந்த சிகிச்சை வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது. இது முதியோருக்கு பாதுகாப்பா னது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது டாக்டர்கள் லட்சுமணன், கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.