உள்ளூர் செய்திகள்

மாட்டுவண்டி பந்தயத்தை யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

Published On 2023-06-30 08:44 GMT   |   Update On 2023-06-30 08:44 GMT
  • 6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சின்ன மாடு பிரிவில் 9 மாடுகள் பங்கேற்றது.
  • 5 கிலோமீட்டர் தூரம் கொண்ட பூஞ்சிட்டு பிரிவில் முதல் பரிசு ரூ.15 ஆயிரத்தை ஏ.எம். பட்டியை சேர்ந்த ஜெயசூர்யா மாட்டு வண்டி பெற்றது.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தில் உள்ள சந்தன மாரியம்மன், மாடசாமி கோவில் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் விருசம்பட்டி-விளாத்திகுளம் சாலையில் நடத்தப்பட்டது. மாட்டுவண்டி பந்தயத்தை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சின்ன மாடு பிரிவில் 9 மாடுகள் பங்கேற்றது. இதில் முதல் பரிசு ரூ.20 ஆயிரத்தை சக்கம்மாள்புரத்தை சேர்ந்த கமலா மாட்டுவண்டியும், 2-வது பரிசு ரூ.15 ஆயிரத்தை மாமுநயினார்புரத்தைசேர்ந்த முஜின் பிரணவ் மாட்டு வண்டியும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரத்தை ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த முகிலன் மாட்டு வண்டியும், 4-வது பரிசு ரூ.5 ஆயிரத்தை சக்கம்மாள்புரம் தாவீது- அரசரடி கதிர்வேல் பாண்டியன் மாட்டுவண்டியும் பெற்றது.

5 கிலோமீட்டர் தூரம் கொண்ட பூஞ்சிட்டு பிரிவில் முதல் பரிசு ரூ.15 ஆயிரத்தை ஏ.எம். பட்டியை சேர்ந்த ஜெயசூர்யா மாட்டு வண்டியும், 2-வது பரிசு ரூ.10 ஆயிரத்தை இந்திரா நகர் பாப்பா -பல்லாகுளம் சஷ்டிகா தங்கப்பாண்டி மாட்டுவண்டியும், 3-வது பரிசு ரூ.8 ஆயிரத்தை விளாத்திகுளம் காசிலட்சுமி- ராமச்சந்திராபுரம் மதுமிதா மாட்டு வண்டியும் பெற்றது. மாட்டுவண்டி பந்தயத்தை காண சாலை ஓரங்களில் கூடி நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Tags:    

Similar News