உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட வீட்டை காலி செய்ய கூறியதால் தற்கொலைக்கு முயன்ற வியாபாரி

Published On 2022-12-20 07:56 GMT   |   Update On 2022-12-20 07:56 GMT
  • தற்போது ரத்தினபிள்ளை தான் கொடுத்த நிலத்தை 2 ஆண்டுகளாக திருப்பி கேட்டு வந்துள்ளார்.
  • இதைப் பார்த்த போலீசார் உடனே அவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பெரிய குளக்கரை பகுதியை சேர்ந்தவர் ரத்தினபிள்ளை. இவரது மகன் சேதுராமன். இந்நிலையில் ரத்தின பிள்ளைக்கு அதே பகுதியில் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு துரைராஜ்கும் அவரது அண்ணன் தம்பிகளுக்கும் கொடுத்தார். அந்த நிலத்தில் துரைராசும் அவரது அண்ணன் தம்பியும் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தற்போது ரத்தினபிள்ளை தான் கொடுத்த நிலத்தை 2 ஆண்டுகளாக திருப்பி கேட்டு வந்துள்ளார். இதனால் துரைராஜின் அண்ணன் தம்பி அந்த இடத்தை விட்டு சென்றனர். ஆனால் பெட்டிகடை நடத்தி வரும் துரைராஜ் மட்டும் காலி செய்ய மறுப்பு தெரிவித்து கோர்ட்டில் மனு அளித்தார்.

ஆனால் கோர்ட்டில் நிலம் உரிமையாளருக்கு சொந்தம் என்று தீர்ப்பானது. இதனால் இன்று கோர்ட் உத்தரவின் பேரில் காட்டுமன்னார்கோயில் வருவாய்த்துறையினர் போலீசாரின் முன்னிலையில் துரைராஜை அந்த இடத்தில் உள்ள வீட்டில் இருந்து அப்புறப்படுத்தினர். உடனே துரைராஜ் நான் காலி செய்ய மாட்டேன் என்று கூறி தன்மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். இதைப் பார்த்த போலீசார் உடனே அவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது. 

Tags:    

Similar News