உள்ளூர் செய்திகள் (District)

காரமடை அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு

Published On 2023-03-17 09:37 GMT   |   Update On 2023-03-17 09:37 GMT
  • போக்குவத்திற்கு இடையூறாக செயல்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • இச்சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம்,

காரமடை அருகே காயத்துடன் சுற்றித்திரிந்த மக்னா யானையை அடர் வனப்பகுதிக்குள்

விரட்டக்கோரி தமிழக விவசாய சங்க தலைவர் வேணுகோபால் தலை மையில் காரமடை - தோலம்பாளையம் செல் லும் சாலை தாயனூரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்த காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், வட்டாட்சியர் மாலதி, வனச்சரகர் திவ்யா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் மக்னா யானையை அடர் வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து சாலை மறியல் கை விடப்பட்டது.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நி லையில் போக்குவரத்திற்கு இடையூறாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாய சங்க தலைவர் வேணுகோபால் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்டோர் மீது காரமடை போலீசார் பொதுபோக்குவத்திற்கு இடையூறாக செயல்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News