குலசேகரன்பட்டினம் தருவை குளத்தில் சிக்கி மாடு பலி
- மாடுகள் குளத்தில் இறங்கும்போது சகதியில் சிக்கி கொள்வதால் வெளியே வர முடியாமல் அவை இறந்து போவது வாடிக்கையாகிவிட்டது
- தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாடுகளை உயிருடன் மீட்டனர்.
உடன்குடி:
உடன்குடி அனல்மின் நிலைய பின்புறம் உப்பு நீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இது எல்லப்பநாயக்கன் குளத்தின் உபரிநீர் தேங்கும் தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால் அதன் தரையை உயர்த்த சுற்றுவட்டார பகுதிகளில் மணல் அள்ளி நிரப்பினர். தற்போது ஆபத்தான பகுதியாகிவிட்டது
காடுகளில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் தண்ணீர் குடிக்க குளத்தில் இறங்கும்போது கால்கள் சகதியில் சிக்கி கொள்வதால் வெளியே வர முடியாமல் அவை இறந்து போவது வாடிக்கையாகிவிட்டது. மேலும் இதுஆட்கள் அதிகம் நடமாடாத காட்டுப்பகுதி என்பதால் அதிகம் வெளியே தெரிவதில்லை.
இந்த நிலையில்ஒரு பள்ளத்தில் மாடுகள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பக்கத்து தோட்டக்காரர் சிவலூர்ஜெயராஜ் உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து மாடுகளை உயிருடன் மீட்டனர். இதில் ஒரு மாடு பலியாகி விட்டது.