கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கைகளை இழந்து காலினால் மனு எழுதிய மாற்றுத்திறனாளி பெண்
- பண்ருட்டி போலீஸ் லைன் தெருவில் வசிப்பவர் தீபா
- எனக்கு பெட்டிக்கடை வைக்க இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித் வந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லைன் தெருவில் வசிப்பவர் தீபா (வயது 26). 2 கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளியான இவர் தனது காலால் மனு எழுதி கலெக்டரிடம் அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
2 கைகளையும் இழந்த நான் பெட்டிக்கடை வைக்க விரும்புகிறேன். அதனால் எனக்கு பண்ருட்டி லிங்க் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் பெட்டிக்கடை வைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும். இதன் மூலம் நான் யாருடைய உதவியும் இன்றி எனது பெற்றோரை கவனித்து கொள்ள உதவியாக இருக்கும். எனவே எனக்கு பெட்டிக்கடை வைக்க இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. காலினால் மனு எழுதிய மாற்றுத் திறனாளி பெண்ணை, அங்கு வந்த பொதுமக்கள் அச்சரியத்துடன் பார்த்து சென் றனர்.