கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மீனவர்கள் குறை கேட்பு கூட்டம் நாளை நடக்கிறது
- மீனவர்களிடையே குறை களைக் கேட்டறிந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்துகிறார்.
- பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொள்கின்றனர்.
கடலூர்:
கடலூர் பாதுகாப்பு குழுமம் சார்பில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் நாளை (18 ந்தேதி) ஆய்வு கூட்டம் மற்றும் மீனவர்களிடையே உள்ள குறை கேட்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு ஏ.டி.ஜி.பி.சந்திப் மிட்டல் கலந்து கொண்டு ஆய்வு செய்து , மீனவர்களிடையே குறை களைக் கேட்டறிந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்துகிறார்.
இக்கூட்டத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநி லத்திலிருந்து கடலோர காவல் படை அதிகாரிகள், கியூ பிரிவு போலீசார், மீன்வளத்துறை அதிகாரி கள் மற்றும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மீனவப் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி கிராமத்தில் அதன் முக்கியஸ்தர்கள் மற்றும் மீனவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவ கிராமங்களில் நடைபெறும் பிரச்சினைகள், அவர்களுக்கான குறைகள் கேட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் அதிகாரி கள் எடுத்துள்ள நட வடிக்கை களும் பொது மக்கள் இடையே ஏற்படுத்தி உள்ள விழிப்புணர்வு தொடர்பாக ஆய்வு நடை பெற உள்ளது.