கழுத்தில் சில்வர் பாத்திரம், மண்வெட்டியை மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த கணவன், மனைவி
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் என் மனை விக்கு வேலை வேண்டி விண்ணப்பித்திருந்தேன்.
- வேலைக்கு வராமல் வேலை செய்ததாக முறைகேடாக பண பரிவர்த்தனை செய்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலு வலகத்தில் இன்று குறைகேட்பு கூட்டம் நடை பெற்றது. குறிஞ்சிப்பாடி கருங்குழி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், அவரது மனைவி ஆகியோர் மனு அளிக்க வந்தனர். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்களை வேலையில் அமர்த்திய ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பதாகைகள் ஏந்தி நின்றிருந்தனர். மேலும் ராஜேந்திரன் சில்வர் பாத்திரம் மற்றும் மண்வெட்டி ஆகியவற்றை மாலையாக கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் என் மனை விக்கு வேலை வேண்டி விண்ணப்பித்திருந்தேன். ஆனால் இதுநாள் வரை என் மனைவிக்கு இந்த திட்டத்தில் வேலை தர மறுக்கின்றனர். பலமுறை இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மேலும் வேலை அட்டை பதிவு செய்யவில்லை. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இந்த வேலை திட்டத்தில் சேர்த்து முறைகேடு செய்துள்ளனர். மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வராமல் வேலை செய்ததாக முறைகேடாக பண பரிவர்த்தனை செய்துள்ளனர். ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் சமமாக வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.