தஞ்சை விளையாட்டு அரங்கில் புதிதாக கட்டப்பட்ட ஸ்கேட்டிங் தளம்; அமைச்சர் ஆய்வு
- 1.1 கி.மீ. தொலைவுள்ள நடைப்பயிற்சி பாதை, நுழைவுவாயில் வளைவு ஆகியவை கட்டப்பட்டன.
- இவற்றை நாளை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளாா்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் ஸ்கேட்டிங் தளம் உள்ளிட்டவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறாா்.
இந்த விளையாட்டரங்க–த்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்கேட்டிங் தளம், இரு கையுந்து பந்து தளங்கள், 1.1 கி.மீ. தொலைவுள்ள நடைப்பயிற்சி பாதை, நுழைவுவாயில் வளைவு ஆகியவை கட்டப்பட்டன.
இவற்றை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளாா்.
இதையொட்டி, அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா , ஸ்ரீகாந்த்,
மேயா் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.