உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி வழியாக கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு இரவு நேர ரெயிலை இயக்க வேண்டும்

Published On 2023-09-02 09:22 GMT   |   Update On 2023-09-02 09:22 GMT
  • கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
  • வணிகர்களுக்கு உரிய இழப்பீடு, ஓய்வூதியம் வழங்கவும் தீர்மனம்

கோவை,

கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. ஆர்.எஸ்.கணேசன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன், பாரூக், ரமேஷ், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அப்துல் ரஹிமான் வரவேற்றார்.

பொதுக்குழு கூட்டத்தில் நிலவில் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது, கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு இரவுநேர விரைவு ரெயிலை பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்குவதற்கான நடவடிக்கைகளில் சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட வேண்டும்,

இயற்கை பேரிடர் மற்றும் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொட்டல பொருட்களுக்கு உரிமம் வழங்குவதில் இரட்டை முறையை மாற்றி அமைத்து உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற்றால் போதும் என சட்ட விதிகளை மாற்றி அமைக்க வலியுறுத்துவது, தியாகி குமரன் மார்க்கெட் நுழைவு வாயில் வளைவு பெயர் பலகை அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஆர்.எஸ்.கணேசன் புதிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Tags:    

Similar News