தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
- தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அப்போது, மொய்தீன் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், முனியசாமி, தனிப்பிரிவு தலைமை காவலர் முருகேசன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தூத்துக்குடி கோமாஸ்புரம், ராஜீவ்காந்தி ஹவுசிங் போர்டு குவாட்டர்ஸ் பகுதியில், அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் (வயது 40) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மொய்தீனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 33 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொய்தீன் புகையிலை பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்தார்? எங்கு கொண்டு செல்கிறார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.