கொடைக்கானல் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
- ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவரை பிடித்து விசாரணை மேற்கொ ண்டனர்.
- அவர் சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. உடனே அவரை நக்சல் தடுப்பு போலீசார், கொடைக்கானல் போலீசாருடன் இணைந்து கைது செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து போலீசாரால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் சில சமூக விரோத கும்பல்கள் கஞ்சா பயிரிட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் நக்சல் தடுப்பு போலீசார் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, கீழான வயல் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளத்துரை (வயது50) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொ ண்டனர்.
அப்போது அவர் சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. உடனே அவரை நக்சல் தடுப்பு போலீசார், கொடைக்கானல் போலீசாருடன் இணைந்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து சுமார் 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைக்கா னல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சா மற்றும் போதை காளான்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.