பாதுகாப்பு பணிக்குச் சென்ற போலீஸ் வாகனம் விபத்து
- அதிகாலை அவிநாசி பாலம் அருகே போலீஸ் வாகனம் சென்றது.
- போலீஸ் வாகனத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 போலீசாரம் படுகாயம் அடைந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்வாளன் மாயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கடலூரில் இருந்து இந்த பாதுகாப்பு பணிக்காக கோவை நோக்கி நேற்று மாலை போலீஸ் வாகனத்தில் சுமார் 16 போலீசார் குழு உடன் சென்றனர். போலீஸ் வாகனத்தை மோகன் (வயது 27) என்பவர் ஓட்டி சென்றார்.
இன்று அதிகாலை அவிநாசி பாலம் அருகே போலீஸ் வாகனம் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் போலீஸ் வாகனம் முன்பகுதி பலத்த சேதமானது. போலீஸ் வாகனத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 போலீசாரம் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அவிநாசி போலீஸ் டிஎஸ்பி எஸ் பி மற்றும் போலீஸார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த போலீசர்களை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.