உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியை மத்திய மந்திரிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

பூம்புகார் துறைமுகத்தில் மீனவர்களின் குறைகள் கேட்டறியும் நிகழ்ச்சி

Published On 2023-10-09 09:40 GMT   |   Update On 2023-10-09 09:40 GMT
  • பிரதமர் மீனவர்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
  • ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

சீர்காழி:

சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுக வளாகத்தில் மீனவர்களின் குறைகள் கேட்டறியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமை வகித்தார்.

மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம்,மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பேசுகையில், இந்திய கடலோர பாதுகாப்பின் கவசமாக மீனவர்கள் திகழ்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

எனவே மீனவர்களை கடலோர காவல் தெய்வங்கள் என்று அழைக்கலாம் பிரதமர் நரேந்திர மோடி மீனவர்கள் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மீனவர்களுக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்திய பெருமை அவரையே சேரும்.

பிரதமரின் திட்டத்தால் கடைகோடியில் வசிக்கும் மீனவர்களும் பயனடைகிறார்கள் என்ற செய்தி மிகவும் வரவேற்கத்தக்கது என்றார்.

மத்திய தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சர் எல் .முருகன் பேசும் போது மீனவர் நலன் சார்ந்த குழுக்களில் மீனவர் பிரதிநிதி இடம்பெற வேண்டுமென பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

2014 - க்கு பிறகு மீனவர்களு க்காக ரூ 38.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

நமது நாடு இறால் ஏற்றுமதியிலும் முதலிடம் வகிக்கிறது கடல் சார்ந்த பொருட்கள் என்று பதில் நான்காம் இடத்தில் உள்ளோம் விரைவில் முதல் இடத்தை பிடிப்போம் என்றார்.

நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர், பாஜக வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் முருகன் குறித்த பலர் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரபாபு நன்றி கூறினார்.

தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி பூம்புகார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் நிஷாந்த் முன்னிலையில் நிதி உதவி க்கான காசோலைகள் மத்திய அமைச்சர்கள் வழங்கினர்.

Tags:    

Similar News