அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
- கிளை செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விழா ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.
திருத்துறைப்பூண்டி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேமம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநில மருத்துவ அணி தலைவர் கனிமொழி, என்.வி.என்.சோமு எம்.பி. மற்றும் செயலாளர் மரு.எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ ஆகியோரின் அறிவுறுத்தல்படி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் அஞ்சுகம் பூபதியின் வழிகாட்டுதல் படி, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.வின் ஆலோசனை ப்படி அண்ணா பிறந்தநாள் மற்றும் கருணாநிதி நூற்றா ண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட மருத்துவ அணி சார்பில் திருத்துறைப்பூண்டி அடுத்த விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணி தலைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட அமைப்பாளர் திவாகரன் சுபாஷ், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பிரகாஷ், ஊராட்சி தலைவர் தனலஷ்மி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட மருத்துவ அணி துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள் வீரராகுல் (திருத்துறைப்பூண்டி), அரவிந்தன் (மன்னார்குடி), ஒன்றிய துணை தலைவர் ராமகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தொகுதி துணை அமைப்பாளர் தீபன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.