உள்ளூர் செய்திகள்

பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்த காட்சி.

10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி பா.ம.க.வினர் மனு அனுப்பும் போராட்டம்

Published On 2023-05-30 09:16 GMT   |   Update On 2023-05-30 09:16 GMT
  • வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற போராட்டம் நடத்தினர்.
  • பா.மக.வினர் காட்டுமன்னார்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று தாபால் நிலையம் வந்தடைந்தனர்.

கடலூர்:

காட்டுமன்னார்கோவில் ஒன்றிய, நகர பா.ம.க சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு மே மாதம் 31-ந் தேதிக்குள் நிறைவேற்றக் கோரி தமிழக முதல்-அமைச்சருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தலைவருக்கும் தபால் மூலம் 20 ஆயிரம் மனு அனுப்பும் போராட்டம் காட்டு மன்னார்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் நகர செயலாளர்டாக்டர் அன்பு சோழன் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஒன்றிய செயலாளர் வக்கீல் கார்த்திகேயன் கலந்து கொண்டார்.சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னாதாக பா.மக.வினர் காட்டுமன்னார்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று தாபால் நிலையம் வந்தடைந்தனர். அதன் பின்னர் தபால் நிலைய அதிகாரிகளிடம்சுமார் 20 ஆயிரம் மனுக்களை மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் முன்னிலையில் தபால் தலை ஒட்டிகொடுத்தனர்.

Tags:    

Similar News