உள்ளூர் செய்திகள்

கோவை சுந்தராபுரம் பகுதியில் அரிய வகை வெள்ளை நாகபாம்பு

Published On 2023-10-10 09:26 GMT   |   Update On 2023-10-10 09:26 GMT
  • பார்சியல் ஆல்பினோ கோப்ரா வகையைச் சார்ந்த இந்த பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • பாம்பை பார்த்தால் உடனடியாக வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

கோவை,

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்தவர் வழக்கம் போல தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப சென்றார்.

அப்போது அந்த தொட்டிக்குள் ஒரு பாம்பு பதுங்கி இருப்பது தெரிய வந்தது. எனவே அவர் உடனடியாக வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் பாம்பு பிடி வீரர் மோகன் என்பவரை தொடர்புகொண்டார்.

அவரும் உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்று தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்து உள்ளார். அப்போது வனப் பகுதியில் அரிதாக உலா வரும் வெள்ளை நாகம் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

பார்சியல் ஆல்பினோ கோப்ரா வகையைச் சார்ந்த இந்த பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவையில் சில மாதங்களுக்கு முன்பாக இதேபோல வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டது.

மழைக் காலம் என்பதால் இனி பாம்புகள் பொது இடங்களில் உலாவும். பாம்பை பார்த்தால் உடனடியாக வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News