பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது - மத்திய மந்திரி தகவல்
- நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை.
- சோதனை தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய சிறு குறு தொழில்துறை இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து மாநில அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்து சோதனை நடத்திய தேசிய புலனாய்வு நிறுவனம் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த சோதனை தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் நடைபெற்றது.
மத்திய அரசு 89 தொழில் குழுமங்களை உருவாக்கி உள்ளது, அவற்றில் 27 தொழில் குழுமங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.