உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே பூட்டி கிடக்கும் ஆயில் தொழிற்சாலையில் தொடர் திருட்டு

Published On 2022-11-08 07:11 GMT   |   Update On 2022-11-08 07:11 GMT
  • புதுச்சத்திரம் பகுதியில் ஆயில் சுத்திகரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது.
  • தொழிற்சாலையில் இரும்பு உள்ளிட்ட பொருள்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது.

கடலூர்:

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் ஆயில் சுத்திகரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. இந்த தொழிற்சாலை நீண்ட நாட்களாக செயல்படாமல் பூட்டியே கிடக்கின்றது. இந்நிலையில் பூட்டிக்கிடக்கும் தொழிற்சாலையில் இரும்பு உள்ளிட்ட பொருள்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இந்த இரும்பு பொருட்களை புதுச்சத்திரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் உள்ள வர்கள் இங்கு வந்து இரும்பு பொருட்களை திருடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

நேற்று இரவும் இந்த ஆலையில் திருட்டு சம்பவம் தொடர்ந்துள்ளது. இதில் இரும்பு பொருட்களை திருட மர்ம கும்பல் 3 மினி லாரிகளில் சுமார் 700 கிலோ இரும்பு பொருட்களை திருடி செல்ல முற்பட்டனர். இந்த திருட்டு குறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை கண்டவுடன் மர்மகும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. மேலும் போலீசார் சுமார் 20000 மதிப்புள்ள 700 கிலோ இரும்பு பொருட்கள் ஏற்றி இருந்த 3 மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News