கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த ஒற்றை கரடி
- குடியிருப்பில் சுற்றிய கரடி தடுப்பு சுவரில் ஏறி நடந்து சென்றது
- 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அரவேணு
கோத்தகிரி வனப் பகுதிகளில் கரடி, சிறு த்தை, மயில், மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் தற்போது உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைவது வாடிக்கை யாகி விட்டது. குறிப்பாக கோத்தகிரி நகரின் மையப்பகுதிகளான பஸ்நிலையம், கடைவீதி, காம்பாய் கடை, மாதா கோவில் சாலை, கார்சிலி, கன்னிகா தேவி காலனி உள்ளிட்ட பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.தொடர்ந்து வனவில ங்குகுள் ஊருக்குள் வருவ தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகே உள்ள புனித லூக்கா ஆலயம் அருகே 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அந்த பகுதியில் கரடி ஒன்று புகுந்தது. அந்த கரடி அந்த பகுதியிலேயே வெகுநேரமாக சுற்றி திரிந்து விட்டு, சர்வசாதாரணமாக அங்குள்ள சாலையில் நடந்து சென்றது.
கரடி ஊருக்குள் புகுந்ததை அறிந்த நாய்கள் குரைத்து கொண்டே இருந்தன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வந்து பார்த்தனர்.
அப்போது வெளியே கரடி நடமாடி கொண்டி ருந்தது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடு களுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டனர்.
சிறிது நேரம் அங்கு சுற்றி திரிந்த கரடி, குடியிருப்பையொட்டி இருந்த தடுப்புச் சுவர் மீது லாவகமாக ஏறி ஆலய வளாகத்திற்குள் புகுந்து மறைந்தது. கரடி சுற்றி திரிவதையும், தடுப்பு சுவரில் ஏறுவதையும் சிலர் வீடுகளுக்குள் இருந்தவாறே செல்போனில் வீடியோ எடுத்தனர்.
அதனை சமூக வலைத ளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இதற்கிடையே குடியிரு ப்புக்குள் சுற்றும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.