உள்ளூர் செய்திகள்

பூஜையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.

பாவூர்சத்திரம் அருகே அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை

Published On 2023-08-18 09:44 GMT   |   Update On 2023-08-18 09:44 GMT
  • தானியங்களை கொண்டு தயார் செய்யப்பட்ட கஞ்சி உள்ளிட்டவை அம்மனுக்கு படையல் செய்யப்பட்டது.
  • அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்ட முறுக்கு, அதிரசம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருணாபேரி அழகு முத்து மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டியும், நல்லமழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் இன்று அதிகாலையில் நடத்தப் பட்டது.

ஆடிமாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலையில் அழகுமுத்து மாரியம்மனுக்கு பழங்கள், முறுக்கு, அதிரசம், வளையல்கள், தாமரை மலர்கள் போன்றவற்றால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தானியங்களை கொண்டு தயார் செய்யப்பட்ட கஞ்சி உள்ளிட்டவற்றை படையல் செய்து சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது.

இதில் பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம், தென்காசி மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பூஜை முடிந்ததும் அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்ட முறுக்கு, அதிரசம், வடை மாலை, பழங்கள் மற்றும் வளையல்கள் அனைத்தும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

பொதுமக்கள் அனைவருக்கும் சிறப்பு தர்ம கஞ்சியும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையிலான பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News