உள்ளூர் செய்திகள்

தீவிபத்தில் கருகிய மக்காச்சோள பயிர்களை படத்தில் காணலாம்.


கயத்தாறு அருகே தோட்டத்தில் 'திடீர்' தீ விபத்து - ரூ.1½ லட்சம் பயிர்கள் எரிந்து நாசம்

Published On 2023-02-21 08:09 GMT   |   Update On 2023-02-21 08:09 GMT
  • நேற்று இரவு ஜெயக்குமார், பிரகாஷ் ஆகியோரின் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
  • சேதமான பயிர்களின் மதிப்பு ரூ.1 ½ லட்சம் என கூறப்படுகிறது.

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது.

அதில் அவர்கள் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர். தற்போது அவை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு ஜெயக்குமார், பிரகாஷ் ஆகியோரின் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுவதும் அனைக்கப்பட்டது. எனினும் அவர்களது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. சேதமான பயிர்களின் மதிப்பு ரூ.1 ½ லட்சம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெயக்குமார் கயத்தாறு போலீசில் புகார் செய்தார். அதில், தனக்கு வேண்டாத சிலர் தோட்டத்தில் உள்ள மக்காச்சோள பயிர்களுக்கு தீவைத்து சென்றுள்ளனர். எனவே இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

Tags:    

Similar News