விழுப்புரத்தில் செல்போன் கடையில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது
- விழுப்புரத்தில் செல்போன் கடையில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- பிரபல செல்போன் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா கணபதிபட்டு கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் தமிழரசன்(வயது21). இவர் விழுப்புரம் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள பிரபல செல்போன் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே கடையில் ஆடிட்டராக பணிபுரியும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையில் ஆடி ட்டிங் செய்தபோது கடையில் இருந்த பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.
உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மருது நேரில் வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் கடையின் பொறுப்புகளை கவனித்து கொண்டு வந்த தமிழரசன் கடையில் உள்ள ரூ.6,51,830 மதிப்புள்ள 26 புதிய மொபைல்களை பில் போடாமலேயே திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் திருடிச் சென்ற செல்போன்களை விற்பனை செய்து வைத்திருந்த ரூ.4,10,000 பணத்தை போலீசார் பறிமுதல் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.