உள்ளூர் செய்திகள்

கடலூர் இம்பீரியல் சாலையில் டிப்பர் லாரி பழுதானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது,

திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே சாலையில் டிப்பர் லாரி பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2023-02-23 07:38 GMT   |   Update On 2023-02-23 07:38 GMT
  • மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று திடீரென்று லாரி பழுது ஏற்பட்டு சாலையில் நின்றது.
  • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடலூர்:

வெளி மாவட்டங்களில் இருந்து சிதம்பரம், நாகப்பட்டினம் செல்ல க்கூடிய பெரும்பாலான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருகின்றது.இந்த நிலையில் கனரக வாகனங்கள் முழுவதும் கடலூர் ஜவான் பவன் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் , விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.இன்று காலை எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகில் ஜவான் பவன் சாலை வழியாக செல்வதற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று லாரி பழுது ஏற்பட்டு சாலையில் நின்றது. இதனால் பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் ஒன்றின் பின் ஒன்று அணிவகுத்து நிற்க தொடங்கியது. இதனை தொடர்ந்து அனைத்து வாகனங்களும் அதிக ஒலி எழுப்பி கொண்டிருந்தன.ஆனால் பழுதடைந்த லாரியை உடனடியாக சரி செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக மிக முக்கிய சாலையாக கருதக்கூடிய திருப்பாதிரிப்புலியூர் சாலை முழுவதும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் பகுதி என்பதால் கூடுதலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்ததோடு வெளியூருக்கு செல்லும் பொதுமக்களும் பஸ்களில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தனர். இதனை தொடர்ந்து அவசர அவசரமாக மெக்கானிக்கை வரவழைத்து வாகனத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்தும் வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News