உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி காளி கோவில் அருகே லாரி மோதி சாலையில் விழுந்த மரம்; மின்சாரம் துண்டிப்பு
- லாரி மின்கம்பம் மற்றும் புங்கை மரத்தின் மீது மோதியதில் புங்கைமரம் அடியோடு சாய்ந்தது சாலையின் குறுக்கே விழுந்தது.
- உடனடியாக மின்சாரம் நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து முந்திரி தொலும்புகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இது பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளி கோவில் அருகே சென்ற போது சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பம் மற்றும் புங்கை மரத்தின் மீது மோதியது. இதில் புங்கைமரம் அடியோடு சாய்ந்தது சாலையின் குறுக்கோ விழுந்தது. மேலும், மின்கம்பத்தில் இருந்த கம்பிகள்அறுந்து சாலையில் தொங்கியது. உடனடியாக மின்சாரம் நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து அங்கு வந்த மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பியை சரிசெய்து மின் இணைப்பு வழங்கினர்.