கவர்னரிடம் விருது பெற்ற பழங்குடியின விவசாயி மகிழ்ச்சி
- குடத்தில் தண்ணீர் எடுத்துச் சென்று வேளாண்மை செய்தார்.
- போர்வெல் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் அதிக விளைச்சலை உருவாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதாக கூறினார்.
கவுண்டம்பாளையம்,
கோவை பெரியநாயக்க ன்பாளையம் அருகே உள்ள பாலமலை பகுதியில் 5-க்கும் மேற்பட்ட பழ ங்குடியின குடும்பங்கள் உள்ளன. அவர்கள் பருவ மழையை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பால மலை அடுத்த பசுமணிபுதூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரம ணியம் (வயது 55) என்ப வருக்கு சிறந்த விவசாயி விருது வழங்கப்பட்டு உள்ளது. இது பாலமலை பகுதியில் வசிக்கும் கிராம த்தினர் மத்தியில் பெருமிதம் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சுப்பிர மணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
நாங்கள் பாலமலை பகுதியில் தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறோம். அங்கு பருவமழையை மட்டும் நம்பியே விவசாயம் நடக்கிறது. மேலும் எங்க ளின் 4 ஏக்கர் பரப்பளவில் சக உறவினர்கள் உதவி யுடன் ராகி, கம்பு, சோளம் உட்பட வானம் பார்த்த பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம்.
சில சமயங்களில் நாங்களே குடத்தில் தண்ணீர் முகர்ந்து சென்று பயிர்களுக்கு விட்டு வேளாண்மை செய்து வருகிறோம். இயற்கை முறையில் விளைவதால் பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் இங்கு வந்த வேளாண்து றையினர் எங்களின் விவ சாய நேர்த்தி பற்றி அறிந்து மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி என்னை சென்னைக்கு அழைத்து கவுரவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இது எங்களை போன்ற பழங்கு டியின மக்களை ஊக்குவி ப்பதாக அமைந்து உள்ளது.
மேலும் தற்போது காப்பி விளைச்சல் செய்வதற்காக தனியார் அமைப்பினர் சோதனை அடிப்படையில் எங்களுக்கு விதைகளை கொடுத்து உள்ளனர். பாலமலை பகுதியில் வசி க்கும் பழங்குடியின மக்க ளுக்கு விவசாய நிலத்தில் போர்வெல் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் அதிக விளைச்சலை உருவாக்கி, எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த இயலும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் சிறந்த விவசாயி விருது பெற்ற சுப்பிரமணிய த்துக்கு, பாலமலை அரங்க நாதர் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.