கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் லாரி தீப்பிடித்து எரிந்தது
- தொடர்பாக பிடிக்கப்பட்ட லாரி ஒன்று பல மாதங்களாக நின்று கொண்டிருந்தது.
- கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கடலூர்:
கடலூர் திருப்பா திரிப்புலியூர் நத்தவெளி சாலையில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு விசாரணை வழக்கு தொடர்பாக பிடிக்கப்பட்ட லாரி ஒன்று பல மாதங்களாக நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை நின்று கொண்டிருந்த லாரி திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது.இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்து உடனடியாக மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் தீயை அணைக்க முயற்சி செய்த நிலையில், தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த லாரியின் தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.