- தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர்
- வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்
ஊட்டி
நீலகிரி பந்தலூர் தாலுகா அத்திகுன்னா அருகே கே.கே.நகர் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். இந்த மரங்களை காட்டுயானைகள் அவ்வப்போது புகுந்து நாசம் செய்து வருகின்றன. மேலும் பொதுமக்களின் குடியிருப்புகளையும் உடைத்து அட்டகாசம் செய்கின்றன. இது தவிர சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், மாணவ-மாணவிகளையும் துரத்தி வருகின்றன. இந்தநிலையில் ஒற்றை யானை ஊருக்குள் புகுந்து பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. முன்னாள் கவுன்சிலர் மூர்த்தியின் தோட்டத்தில் இருந்த வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்தியது. இதை அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவி மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.