அம்மையநாயக்கனூரில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு
- 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பார்த்தபோது அதில் பெண் உள்ளே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
- தீயணைப்புத்துறையினர் விரைந்துவந்து பெண்ணை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே உள்ள சி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் மனைவி ராணி (வயது 37). இவர் சோலைக்குட்டம் பகுதியில் உள்ள காளவாசலில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். உடன் வேலை பார்ப்பவர்கள் அக்கம் பக்கம் தேடிப்பார்த்தனர்.
அங்குள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பார்த்தபோது அதில் ராணி உள்ளே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அந்த கிணற்றில் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் இருந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது.
உடனடியாக இது குறித்து நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.
கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பெண்ணை மீட்டு திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.