கடலூர் முதுநகரில் தீ விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் பலி
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீ விபத்தில் கடந்த 9-ந்தேதி பலியாகினர்.
- தாயார் செல்வி (50) மேல் சிகிச்சைக்காபலனின்றி இன்று அதிகாலை செல்வி பரிதாபமாக இறந்துவிட்டார்.
கடலூர்.:
கடலூர் முதுநகர் செல்லாங்குப்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீ விபத்தில் கடந்த 9-ந்தேதி பலியாகினர். தற்கொலைக்கு முயன்ற தங்கையின் கணவரை தடுக்க சென்ற தமிழரசி, அவரது 4 மாத மகள் ஹாசினி, தனலட்சுமியின் 4 மாத பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே தீயில் கருகி இறந்து போனர்.
மேலும், இதில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கணவன், மனைவியான சற்குரு, தனலட்சுமி ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதில் இறந்து போன தமிழரசி, தனலட்சுமியின் தாயார் செல்வி (50) மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை செல்வி பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 பேராக உயர்ந்துள்ளது. தாய், 2 மகள்கள், ஒரு மருமகன், 2 குழந்தைகள் என ஒரே குடும்பத்தில் 6 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடேயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.