பொள்ளாச்சி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
- சாலையின் நடுவே வாலிபர் ஒருவர் மொபட்டில் குடிபோதையில் நின்றிருந்தார்.
- போலீசார் புகாரின் பேரில் பஞ்சலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை
ேகாவை அங்காளகுறிச்சி என்.ஜி.கே.நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). அரசு பஸ் டிரைவர். இவர் சம்பவத்தன்று பஸ்சை ஆர்.எம்.புதூரில் இருந்து பொள்ளாச்சிக்கு ஓட்டி சென்றார்.
அப்போது பஸ் கோட்டூர் பஞ்சாயத்து அலுவலம் வீதி அருகே சென்றபோது சாலையின் நடுவே வாலிபர் ஒருவர் மொபட்டில் குடிபோதையில் நின்றிருந்தார். அதனை பார்த்த பஸ் டிரைவர் ஜெகநாதன் அந்த வாலிபரிடம் ஓரமாக நில்லுங்கள். சாலையில் வாகனங்கள் அதிகமாக செல்கிறது என அறிவுரை கூறினார்.
இதனால் அந்த வாலிபர் ஜெகநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த வாலிபர் சாைலயில் இருந்த கல்லை எடுத்து பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் உடனே கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் கோட்டூரை சேர்ந்த பஞ்சலிங்கம் (38) என்பதும், கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அரசு பஸ் டிரைவர் ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் பஞ்சலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.