உள்ளூர் செய்திகள்
- சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
- விற்பனைக்காக பாக்கெட் சாராயம் இருந்தது தெரிய வந்தது.
நாகப்பட்டினம்:
நாகூர் -கங்களாஞ்சேரி சாலையில் நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது சின்ன கண்ணமங்கலம் பஸ் நிலையம் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில் விற்பனைக்காக பாக்கெட் சாராயம் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் சின்ன கண்ணமங்கலம் வடக்குதெருவை சேர்ந்த நீதிதேவன் மகன் தாய்குமார் (வயது 31) என்பது தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் தாய்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.