உள்ளூர் செய்திகள்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்
- முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வேதநாயகி அம்மன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
- சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.
அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.
முன்னதாக வேதநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள, சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது.
பின், கோவில் ஆதீன வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.
இதில் யாழ்பாணம் வரணீ ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்னம், உப்பு வியாபாரம் சுப்பையா பிள்ளை குடும்பத்தினர் உள்பட கோவில் அலுவலர்கள், பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.