கோவில்பட்டி புற்றுக்கோவிலில் ஆடித்தபசு கால்நாட்டு விழா
- கோடி சக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
- பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் 40-ம் ஆண்டு ஆடித்தபசு விழா வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் சன்னதி முன்பு கால்நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் கோமியம், மஞ்சள், பால் ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி பொருளாளர் சுப்பிரமணியன் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.