- காவிரி பக்தர்களால் அல் தீபங்கள் ஆற்று நீரில் வரிசையாக மிதக்கவிட்டு ஒளிரச் செய்யப்ட்டது.
- இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி அன்னையை வழிபட்டார்கள்.
திருவையாறு:
அகில பாரத துறவிய ர்கள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகிய அமைப்பினர் 12வது ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரையை கர்நாடக மாநிலம் குடகு மலையிலிருந்து துவங்கி ஒவ்வொரு காவிரி தீர்த்தக் கட்டத்திலும் காவிரி அன்னை விக்ரஹத்திற்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடு செய்து 'காவிரிக் கழிமுகமாம் பூம்புகாரை அடைகிறார்கள்.
இத்துலாம் மாதத்தில் காவிரி அன்னையை துலாக்கட்டத் துறைதோறும் வழிபாடு செய்யும் பொருட்டு நேற்று மாலை திருவையாறு வந்தடைந்த.
காவிரி வழிபாட்டுக் குழுவினர் மற்றும் திருவையாறு அன்னைக் காவிரி பௌர்ணமி வழிபாட்டுக் குழுவினர் ஆகியோர் திருவையாறு காவிரி புஷ்யமண்டபத்துறையில் காவிரி அன்னை விக்ரஹ த்திற்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடுகள் செய்து, காவிரி ஆற்றுக்கு தீபாராதனைக் காட்டப்பட்டது. பின்னர் காவிரி பக்தர்களால் அல் தீபங்கள் ஆற்று நீரில் வரிசையாக மிதக்கவிட்டு ஒளிரச் செய்யப்ட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி அன்னையை வழிபட்டார்கள்.