கீரம்பூரில் புத்தாண்டையொட்டி சாய் பாபாவிற்கு ஆரத்தி விழா
- கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் எழுந்தருளி உள்ள சாய்பாபாவிற்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 4 கால ஆரத்தி விழா நடைபெற்றது.
- இந்த அன்னதானம் தினந்தோறும் காலை முதல் இரவு வரை 3 வேளையும் நடைபெறும். நித்ய அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் எழுந்தருளி உள்ள சாய்பாபாவிற்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 4 கால ஆரத்தி விழா மற்றும் நித்ய அன்னதானம் நேற்று நடைபெற்றது. இதில் காலை 6 மணிக்கு ஆரத்தி, 7 மணிக்கு புனித தீர்த்த நீராடல் நிகழ்ச்சி, 8 மணிக்கு நெய்வேத்தியம், சங்கல்ப பூஜை, சிறப்பு ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு நித்ய அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை நாமக்கல் ராமலிங்கம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
இந்த அன்னதானம் தினந்தோறும் காலை முதல் இரவு வரை 3 வேளையும் நடைபெறும். நித்ய அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மதியம் மற்றும் மாலையிலும் ஆரத்தி நடைபெற்றது. இந்த விழாவில் நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டிபட்டி சாய் தபோவன கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.