உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் உறுதி மொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்து கொண்டனர்.

கிருஷ்ணகிரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிப்பு

Published On 2023-02-10 10:01 GMT   |   Update On 2023-02-10 10:01 GMT
  • கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
  • வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில், அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் நேற்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில், அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், துணை தாசில்தார் சிதம்பரம், கலெக்டர் அலுவலக மேலாளர் ராமச்சந்திரன், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News