உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

Published On 2023-01-30 10:14 GMT   |   Update On 2023-01-30 10:14 GMT
  • உண்மையுடன் பணியாற்றுவது எனது கடமையாகும்.
  • மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தஞ்சாவூர்:

மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதன்படி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அப்போது இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்ப டைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையு டனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மூன்னதாக மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதேபோல் தொழுநோய் ஒழிப்பு குறித்தும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News