மலைச்சாலையில் முட்செடிகளால் தொடர் விபத்து
- பெரும்பாறை-புல்லாவெளி இடையே சாலையின் இருபுறமும் வளர்ந்த முட்செடிகளால் தொடர் விபத்து ஏற்படுகிறது
- நெடுஞ்சாலை துறையினருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பெரும்பாறை :
திண்டுக்கல் மாவட்டம் புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, பெரும்பாறை, தடியன்குடிசை வரை சாலை இருபுறங்களிலும் முட்செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் அந்த வழியாக பஸ், லாரி, கார், ஜீப் போன்ற வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியவில்லை. மேலும் கனரகவாகனங்கள் செல்லும் போது இரு சக்கரவாகனங்கள் விலகிசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.புல்லாவெளி-பெரும்பாறை இடையே சில நாட்களுக்கு முன் பஸ், மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் எரிந்தது.
அடிக்கடி பஸ், வேன் மோதிக்கொள்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து 4 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதேபோல் தடியன்குடிசை முதல் தாண்டிக்குடி வரை சாலையின் இருபுறங்களிலும் முட்செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. மேலும் இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலை துறையினருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.