லாரியில் கொண்டுவரப்பட்ட 45 எருமை மாடுகள் பறிமுதல்- டிரைவர் தப்பி ஓட்டம்
- போலீசார் லாரியை நிறுத்தியதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
- மாடுகள் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுராந்தகம்:
ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக லாரியில் மாடுகள் கடத்தி செல்லப்படுவதாக அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை த்தொடர்ந்து அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் கூட்டு ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது லாரியில் சுமார் 45 எருமை மாடுகள் போதிய இடவசதி இல்லாமல் நெருக்கமாக கட்டி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவது தெரிந்தது.
போலீசார் லாரியை நிறுத்தியதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். போலீசார் லாரியுடன் மாடுகளை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 45 மாடுகளை மறைமலைநகரில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். மாடுகள் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் படி இந்த மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.