- இதில் தஞ்சாவூர் டிராகன் சிட்டோ ரியு கராத்தே பள்ளியின் வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை பெற்றனர்.
- ஆண்கள் குமித்தே பிரிவில் தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவன் அபி பாலன் தங்கம் பதக்கம் வென்றார்.
தஞ்சாவூர்:
உலக சிட்டோ ரியு கராத்தே கூட்டமைப்பு ஜகார்த்தா இந்தோனேசியாவில் 10-வது சர்வதேச அளவிலான சிட்டோ ரியு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் தஞ்சாவூர் டிராகன் சிட்டோ ரியு கராத்தே பள்ளியின் வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை பெற்றனர்.
ஆண்கள் குமித்தே பிரிவில் தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவன் அபி பாலன் தங்கம் பதக்கம் வென்றார். பெண்கள் குமித்தே பிரிவில் பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரி தேவதர்ஷினி வெண்கலம் வென்றார்.
சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரி சந்திப் குமார், கோச் கரண், பொன்னியின் செல்வன் ஆகியோர் இறுதிச்சுற்று வரை சென்றனர்.
மேலும் போட்டியில் வடுவூர் நிவேதா, தஞ்சாவூர் பவதாரிணி, அரியலூர் நடராஜன், தாமரை இன்டர்நேஷனல் பள்ளி ஜெய்தேவ், வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி ஜெய் ஜோஷிகா ஆகியோர் போட்டியில் பங்கு பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர் ,வீராங்கனைகளை தலைவர் அருண் மச்சையா, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் பாராட்டினர்.