உள்ளூர் செய்திகள்
பள்ளி வாகனங்களில் கேமரா பொருத்தாவிட்டால் நடவடிக்கை
- தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதியின் படி இயங்கிட தமிழக அரசு உத்தரவு.
- கேமராக்கள் வரும் 15-ந் தேதிக்குள் பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதியின் படி இயங்கிட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து அனைத்து பள்ளி வாகனங்களிலும் சென்சார் உடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட அரசாணையில் உள்ள துணை விதியின் குறிப்பிட்டுள்ளபடி பொருத்தப்பட வேண்டும் என இதன் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
பள்ளி வாகனங்களில் சென்சார் உடன் கூடிய கேமராக்கள் வரும் 15-ந் தேதிக்குள் பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும்.
அவ்வாறு பொருத்தப்படாமல் இயக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.