உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்ப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை
- செல்லப்பிராணி ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 பணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும்.
- செல்லப்பிராணிகள் சாலையில் திரிவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.
கும்பகோணம்:
கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் வளர்க்கும் பொதுமக்கள் அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க உரிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரிமம் பெற்று செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அர்பன் லோக்கல் பாடி ரூல்ஸ் 2023-ன் படி செல்லப்பிராணி ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வீதம் பணம் செலுத்தி உரிய உரிமம் பெற்று, அதில் கூறப்பட்டுள்ள சட்டதிட்டங்க ளுக்கு உட்பட்டு செல்லப்பி ராணிகள் வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்த ப்படுகிறார்கள்.
உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்ப்பதும், அவைகள் சாலையில் திரிவதும் கண்டறிய ப்பட்டால் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வளர்ப்பு பிராணிகள் பறிமுதல் செய்யப்ப டுவதுடன், சட்டவிதி களின்படி வளர்ப்பு பிராணிகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.